Wednesday 9 April 2014

தென்காசி ஷீரடி வைத்திய சாயி திருக்கோவில் கும்பாபிசேகம்

தென்காசி ரயில் நிலையம் அருகில் உள்ள மங்கமாள் சாலையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண சேவா மையத்தில்(சக்தி போதை மறுவாழ்வு மையம்) புதிதாக கட்டப்பட்ட ஷீரடி வைத்திய சாயி திருக்கோவில் கும்பாபிசேகம் திருவிழா, வியாழக்கிழமையன்று (13.03.2014) காலை 10.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
முன்று நாள் நடைபெற்ற யாகசாலையில்  பூஜை செய்த கும்பங்கள் கொண்டு கோபுர கலசங்களுக்கும்,மூலவர் சாய் பாபாவிற்கும் அபிசேகம் செய்யப்பட்டது. சாய் பாபாவிற்கு

சிறப்பு அபிசேகங்கள் செய்யப்பட்டு,சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்றது.இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.           
குற்றாலம் கனரா வங்கி கிளையின் புதிய ஏடிஎம் மையம் திறப்புவிழா
குற்றாலம்  ஸ்ரீ பராசக்தி பெண்கள் கல்லூரின் வளாகத்தில் உள்ள  கனரா  வங்கி கிளையின் சார்பில்,   வாடிக்கையளர்கள் ,சுற்றுலா பயணிகள்
பயன்பெறும் வகையில் புதிய ஏடிஎம் மையம் 24.03.2014 அன்று காலை 10.00 மணியளவில்,குற்றாலம் மெயின் ரோட்டில் உள்ள திரு ஞான சம்பந்த வினயகர் கோயிலின்  சமீபம் உள்ள கட்டடத்தில் திறக்கப்பட்டது.விழாவில், அறநிலையை துறை இணை ஆணையர் திரு M.அன்புமணி ,MA.BL.அவர்கள் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி விழாவினை  துவக்கி வைத்தார். சிறப்பு விருந்துனராக ஸ்ரீ பராசக்தி  கல்லூரின்   முதல்வர்    திருமதி DR.O.ஆனந்தவல்லி, M.A.,M.Phil.ph.D.,அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி ஏடிஎம் மையத்தை துவைக்கி வைத்தார்.
தென்காசி கனரா வங்கி கிளையின் துணை மேலாளர் திரு.  அப்துல் ஜாபர் அவர்கள்  முன்னிலை வகித்து ஏடிஎம் பரிவரித்தனையை துவக்கி வைத்தார்.இவ்விழாவில்

ஸ்ரீ பராசக்தி வித்யாலயாவின் முதல்வர் திரு P.வேலுச்சாமி அவர்கள் விளக்கு ஏற்றி,அனவரையும் இனிப்புகள் வழங்கி  வரவேற்றார்.குற்றாலம் கனரா வங்கி கிளையின் மேலாளர் திருமதி விஜயலட்சுமி அவர்கள்  இவ்விழாவினை ஏற்பாடு செய்து, அனைவரையும் வரவேற்று,அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார்.உடன் விழா ஏற்பாடுகள் வங்கி ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.  

Wednesday 2 October 2013

Five Falls

ஐந்தருவி:
 மிக அழகாக காட்சி அளிக்கும் இந்த அருவி குற்றலத்தில்  இருந்து
5 கிலோமீட்டர் பயணித்தால் அடையலாம். ஆண்கள் பெண்கள் என்று இரு பாலரும் குளிக்கும் ஏதுவாக,தனித்தனியாக அருவிகள் பிரிக்கப்பட்டுள்ளன. வருடம் முழுவதும் தண்ணிர் விழுவதால் இங்கு கூ ட்டத்திற்கு அளவே இல்லை ...

Sunday 25 August 2013

பாலருவி

குற்றாலத்தில் இருந்து 25 கி.மி. தொலைவில் உள்ளது பாலருவி. குற்றாலத்திற்கு மிக அருகில் கேரளாவில் உள்ள ஆரியங்காவு ஐயப்பன் கோவில் அருகே 4  கி.மி பயணித்தால் இந்த பாலருவியை அடையலாம். சுமார் 300 மீட்டர் அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவி மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கின்றது. காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை இந்த அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஒரு நபருக்கு ரூ.10 வீதம் குளிக்க கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. பெண்கள் மற்றும் குழந்தைகள் குளிக்க வசதியாக உள்ளதால் குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் இங்கே அதிகம் வருகின்றனர்.

மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற கார்கள் கண்காட்சி

குற்றாலம் சாரல் விழாவின் ஒரு பகுதியாக எந்த வருடமும் இல்லாத அளவு பல கண்காட்சிகள் நடத்தப்பட்டன. மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற மலர் கண்காட்சி, காய்கறி மற்றும் பழ கண்காட்சி, வாசனை திரவிய பொருட்களின் கண்காட்சி என அந்த வரிசையில் விண்டேஜ் கார்கள் கண்காட்சி பராசக்தி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பங்குபெற்ற 92
வருட பழமைமிக்க கார்கள் அனைத்தும் நல்ல நிலையில் இன்றும் ஓடும் கார்கள் என்பது இன்னும் சிறப்பு. 1921ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட செவெர்லே கார் நிறுவனத்தின் தயாரிப்பான பொன்னிலா பாரிசான் கார் முதலிடம் பெற்றது. இந்த கார்களின் அணிவகுப்பை அமைச்சர்கள் செந்தூர் பாண்டியன் மற்றும் வைகை செல்வன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலும் திருநெல்வேலி கலெக்டர் சமய மூர்த்தி, பேரூராட்சி மன்ற தலைவி லதா அசோக் பாண்டியன், துணை தலைவர் கணேஷ் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த வட்டார போக்குவரத்து அலுவலர்களை கலெக்டர் பாராட்டினார்.

குற்றாலம் சாரல் விழாவை முன்னிட்டு மலர் கண்காட்சி

குற்றாலம் சாரல் விழாவை முன்னிட்டு அரசு தோட்டக்கலை சார்பில் சுற்றுச்சூழல் பூங்காவில் கொடைக்கானல் ஊட்டிக்கு இணையான மலர்கள் கண்காட்சி நடத்தப்பட்டது. விழாவை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் திரு.சரத்குமார் எம்.எல்.ஏ. அவர்கள் தொடங்கி வைத்தார். திரளான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர். வண்ண வண்ண மலர்களால் உருவாக்கப்பட்ட வண்ணத்துபூச்சி, கிளி, மீன், மயில் என பல வடிவங்கள் பார்போரை வசீகரம் செய்தது. நிகழ்ச்சியை திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் திரு.சமயமூர்த்தி, குற்றாலம் டவுன் பஞ்சாயத்து தலைவி திருமதி.லதா அசோக்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.